Kathir News
Begin typing your search above and press return to search.

க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி ஒடிசாவில் மிகப்பெரிய மோசடி

ஒடிசா மாநிலத்தில் க்யூ.ஆர் கோடு பயன்படுத்தி ரூபாய் 14 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

க்யூ.ஆர்.கோடு பயன்படுத்தி ஒடிசாவில் மிகப்பெரிய மோசடி

KarthigaBy : Karthiga

  |  9 July 2023 1:15 PM GMT

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரைத் தலைமை இடமாகக் கொண்டு நிதி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் நொய்டாவை சேர்ந்த மற்றொரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் வணிக பயன்பாட்டிற்காக புவனேஸ்வர் நீதி தொழில்ரநுட்ப நிறுவனம் நொய்டா நிறுவனத்திற்கு யு.பி.ஐ பரிமாற்றத்துக்கான விவரங்களை வழங்கியது.


இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களான கரன்சிங் குமார் மற்றும் அவரது சகோதரர் லாலுசிங் ஆகியோர் புவனேஸ்வர் நிதி நிறுவனத்தின் கோடுக்கு பதிலாக தங்களது நிறுவனத்தின் க்யூ ஆர் கோடை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டனர். இந்த மோசடியின் மூலம் புவனேஸ்வர் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய சுமார் ₹ 14 கோடியை நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்கள் சுருட்டினர்.புவனேஸ்வர் நிறுவனம் தங்களது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதித்த போது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.


இதை அடுத்து அந்த நிறுவனம் உடனடியாக இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கியூ.ஆர்.கோடை பயன்படுத்தி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நொய்டா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான கரன்சிங் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News