Kathir News
Begin typing your search above and press return to search.

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Jan 2020 11:25 AM GMT


உயரமான மலைகள் எப்போதும் ஆச்சரியம் தரத்தக்கவை. உயரமான மலைகள் குறித்த ஒரு தொகுப்பு



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்



படம் : எவரெஸ்ட்


பூமியில்
உயர்ந்த மலைச்சிகரம் எவரெஸ்ட் மலைச் சிகரம் ஆகும் இது கடல்மட்டத்திலிருந்து 8850 மீட்டர்
உயரம் கொண்டது.


அதன்
கூகுள் வரைபட லிங்க் இதோ


Mt Everest


https://maps.app.goo.gl/XrEnkBw6JorGGv9r8


எனினும்
பூமியில் மிகப்பெரிய மலையாக கடலின் அடிப்பகுதியில் இருந்து ஆரம்பித்து 10000 மீட்டர்கள்
உயரமாக உள்ள மவுனா கியா (mauna kia) என்ற மலை ஆகும்.
இது ஹவாய் தீவுகளில் உள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்தை விட உயரம் அதிகம் கொண்ட மலை.
இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மலை ஆகும். இம்மலை எரிமலையும் ஒரு கூட



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்


படம் : கரோலிஸ்
மான்டஸ்


வெள்ளி கிரகத்தின் உயரமான மலை ஸ்காடி மான்ஸ் (Skadi Mons) என்பதாகும். இதன் உயரம் 6.4 கிலோமீட்டர்கள்.



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்


படம் : ஸ்காடி
மான்ஸ் (நாசா)


நிலவின் உயரமான மான்ஸ் ஹைஜன்ஸ் (Mons Huygens) மலை என்பதாகும். இதன் உயரம் 5.5 கிலோமீட்டர்கள்.


சூரிய
குடும்பத்தை சுற்றி வரும் விண்கற்களில், வெஸ்டா(vesta)
என்ற குறுங்கோளில் ரிசில்வியா
(Rheasilvia mountain )என்ற
மலை அமைந்துள்ளது. இது 22.5 மீட்டர் உயரம்
கொண்டது. 505 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. எனினும் வெஸ்டா விண்கல்லாக இருப்பதனால்
, செவ்வாயில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் பெரிய மலையாக எடுத்துக்கொள்ளலாம்.


படம் : வெஸ்டா குறுங்கோள்



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்


படம் : மவுனா
கியா


கூகுள்
வரைபடம்


Mauna Kea


Hawaii 96720, USA


https://maps.app.goo.gl/CB8bLqUHAu5QUdcw7


பூமியில் மட்டும்தான் மலைகள் இருக்குமா? பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மலைகள் இருக்குமா? என்பது போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் எழும். ஆம் பூமி போன்ற கடினமான பாறை அமைப்பு கொண்ட அனைத்துக் கிரகங்களிலும் மலைகள் காணப்படுகின்றன. புதன், வெள்ளி, நிலவு, செவ்வாய், சனியின் துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்கள் ஆகியவற்றில் உயரமான மலைகள் காணப்படுகின்றன. புதன் கிரகத்தில் உயரமான மலை கரோலிஸ் மான்டஸ் (Caloris Montes). இதன் உயரம் கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர்கள்.



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்


படம் : மான்ஸ்
ஹைஜன்ஸ் (பட உதவி : நாசா)


இவற்றிற்கெல்லாம் உயரமாய் ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தை ஒப்பிடுகையில் மிக உயரமான மலை செவ்வாய் கிரகத்தில் அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மலை செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மான்ஸ் (Olympus Mons) எனப்படும் மலையாகும் .



சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மலை! - #கதிர்அறிவியல்


படம்: ஒலிம்பஸ்
மான்ஸ் (படம் உதவி: நாசா)


தரைப் பரப்பில்
இருந்து கிட்டத்தட்ட 22 கிலோ மீட்டர் உயரம் பரவியுள்ள இம்மலை செவ்வாய் கிரகத்தை
சுற்றி வரும் செயற்கை கோள்கள் மூலம் படம் பிடிப்பதற்கு ஏதுவாக காணக்கிடைக்கிறது.
செவ்வாய் கிரகத்தை சுற்றி விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட படம் இது . இதன் நிழல்
தரையில் வெகு தூரத்திற்கு பரவி இருப்பதையும் இங்கு காண முடியும். இது ஒரு எரிமலையும்
ஆகும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News