Kathir News
Begin typing your search above and press return to search.

'பென்டகனை' பின்னுக்கு தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலகம்: கெத்து காட்டும் மோடி!

குஜராத்தின் 'வைர நகரில்' ஒரு புதிய மகுடமாக உலகிலேயே மிகப்பெரிய அளவில் கட்டிடம் திறக்கப்பட உள்ளது.

பென்டகனை பின்னுக்கு தள்ளி உலகிலேயே மிகப்பெரிய அலுவலகம்: கெத்து காட்டும் மோடி!

KarthigaBy : Karthiga

  |  20 July 2023 1:30 PM GMT

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65,000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் இடத்தில் சூரத் வைர பங்குச்சந்தை என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.


சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் தலா 15 மாடிகளைக் கொண்ட ஒன்பது செவ்வக வடிவமைப்புகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும். டெல்லியைச் சேர்ந்த கட்டிடக்கலை நிறுவனமான மார்போ ஜெனிசிஸ் நான்கு ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது.


மொத்த பட்ஜெட் ரூபாய் 3000 கோடி. சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தி உள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியான 'மகேஷ் காதவி பென்டகனை முந்துவது எங்கள் நோக்கம் அல்ல. தேவை அடிப்படையில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. இதனால் வைரத் தொழிலில் ஈடுபடுவோர் இனி தினமும் மும்பை செல்ல வேண்டிய தேவை இல்லை என்று கூறியுள்ளார்'.


வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இந்த கட்டிடம் சூரத் வைரத் தொழில் துறையின் ஆற்றல் , வளர்ச்சியை காட்டுகிறது. இந்திய தொழில் முனைவோ ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று மோடி புகழாரம் சுட்டியுள்ளார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News