பிகில் இசை வெளியீடு: சிறுவனிடம் டிக்கெட்டுக்கு ரூ.2000 பிடுங்கிவிட்டு துரத்தியடித்த கொடுமை! யாரை கைது செய்ய வேண்டும்? விஜய்யையா? டிக்கெட் வித்தவனையா?
பிகில் இசை வெளியீடு: சிறுவனிடம் டிக்கெட்டுக்கு ரூ.2000 பிடுங்கிவிட்டு துரத்தியடித்த கொடுமை! யாரை கைது செய்ய வேண்டும்? விஜய்யையா? டிக்கெட் வித்தவனையா?
By : Kathir Webdesk
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்தது.
இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை நயன்தாரா உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வதாக விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனால், இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரம், இரெண்டாயிரம் என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் குவிந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, 10000 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மனசாட்சியே இல்லாமல் 20000 ஆயிரம் டிக்கெட்டுகளை விநியோகித்துள்ளனர் அதுவும் பணத்திற்கு விற்றுள்ளனர்.
இதனால் டிக்கெட் வாங்கியும், அரங்கத்தினுள் அனுமதிக்காததால் ரசிகள் ஆவேசமடைந்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதில் பல ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், தாங்கள் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகளை கிழித்து எறிந்தனர்.
இதைவிட அனைவரையும் கோபடையச் செய்தது 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிய சிறுவனை உள்ளே அனுமதிக்காததுதான். அந்த சிறுவனின் மழலை ஏக்கத்தை வெளிப்படுத்தும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
அந்த சிறுவன் அந்த வீடியோவில் கூறியதாவது:-
நான் மத்தியானம் 2 மணியில் இருந்து இங்கே இருக்கிறேன். எங்க அப்பாவிடம் பணம் வாங்கி 2000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கிறேன். ஆனால் என்னை உள்ளே விடவில்லை. இவர்கள் செய்வது ரொம்ப தப்பு சார். இவர்கள் இனி எங்கே விழா வைத்தாலும்… பீச்சில் வைத்தாலும், தங்க தாஜ்மகாலில் வைத்தாலும் யாருமே வரமாட்டார்கள் சார். கேரளா எல்லையில் இருந்து ஒரு அண்ணா இங்கே வந்திருக்கிறாங்க. அவங்களும் 2 மணிக்கே வந்திருக்கிறாங்க. அவங்களையும் உள்ளே விடவில்லை. இதெல்லாம் ரொம்ப தப்பு சார்.
இவ்வாறு அந்த சிறுவன் தனது ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
விஜயின் பிகில் பட பாடல்களைவிட, இந்த சிறுவனின் மழலை மொழியில் ஆவேசமான பேச்சுதான் இப்போது, அனைவரின் மொபைல்களிலும் ஒலிக்கிறது.
இந்த நிகழ்சியில் பேசிய நடிகர் விஜய், “சுபஸ்ரீ விபத்தில், யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு டிரைவரையும், பேனர் பிரிண்ட் செய்தவனையும் கைது செய்கிறார்கள்” என்று ஆவேசமாக பேசி ஆதங்கப்பட்டார்.
இப்போது மக்களும் அதையேதான் அவரிடம் கேட்கிறார்கள்.
சிறுவனிடம் 2000 ரூபாயை ஒரு டிக்கெட்டுக்காக பறித்ததுவிட்டு அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. இது அந்த பிஞ்சு உள்ளத்தை எப்படி காயப்படுத்தி இருக்கும்?
டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்றது முதல் குற்றம். அந்த சிறுவன் தந்தையிடம் அடம்பிடித்து 2000 ரூபாய் வாங்கி கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளான். அப்படி இருந்தும் அவனை இசை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க வில்லை. இது இரண்டாவது குற்றம்.
இந்த குற்றங்களுக்கு மூல காரணம் நடிகர் விஜய். அவரது அனுமதி இல்லாம் எதுவுமே நடக்க வாய்ப்பில்லை.
எனவே சிறுவனுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நடிகர் விஜயை கைது செய்ய சொல்லலாமா? அல்லது அந்த சிறுவனிடம் 2000 ரூபாய் பிடுங்கி ஏமாற்றிய விஜயின் ரசிகரை கைது செய்ய சொல்லலாமா?
சுபஸ்ரீ விபத்துக்கு தீர்ப்பு சொன்னது போல, இதற்கும் நடிகர் விஜய் தீர்ப்பு சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.