Kathir News
Begin typing your search above and press return to search.

தட்கல் டிக்கெட் முறைகேடு செய்யும் இணையதள விவகாரம் - பீஹார் இளைஞன் கைது, பகீர் தகவல்கள்

சட்டவிரோதமான இணையதள மென்பொருளை பயன்படுத்தி விரைவாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த விற்பனை செய்த பீஹார் மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்

தட்கல் டிக்கெட் முறைகேடு செய்யும் இணையதள விவகாரம் - பீஹார் இளைஞன் கைது, பகீர் தகவல்கள்
X

KarthigaBy : Karthiga

  |  26 Sept 2022 12:00 PM IST

விரைவாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய பயன்படுத்திய சட்டவிரோதமான இணையதளம மென்பொருளை விற்ற பீகார் மாநில வாலிபரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். வேலூரில் தனியார் ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் கடைகளில் ஐ.ஆர்.சி.டி.சி சாப்ட்வேருக்குள் சென்று விரைவாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து டிக்கெட் விலையை 200 முதல் 500 வரை கூடுதல் விலைக்கு விற்பதாக ரயில் பாதுகாப்பு படை சீனியர் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை அடுத்து அவரது உத்தரவின் பேரில் கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்வே இன்ஸ்பெக்டர் ஆதித்யா குப்தா மற்றும் போலீசார் வேலூரில் சோதனை நடத்தினர்.


அப்போது முறைகேடாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த ஐந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் இரண்டு கடைகளில் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.இதை அடுத்து அந்த மென்பொருளை விற்றது யார் என்று ரயில்வே பாதுகாப்பு படை சைபர் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்த சட்டவிரோத மென்பொருளை விற்றது தெரியவந்தது.


இது குறித்து ரயில் பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், திருவண்ணாமலை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆதித்யா குப்தா, சைபர் செல் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் உட்பட எட்டு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது .இதை அடுத்து தனிப்படை போலீசார் சட்டவிரோதமாக மென்பொருளை விற்பனை செய்த நபரை பிடிக்க கடந்த ஒன்பதாம் தேதி பீகாருக்கு சென்றனர். 20ஆம் தேதி மென்பொருளை விற்ற பீகார் மாநிலம், தானாபூர் பகுதியைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து வேலூர் மேஜிஸ்திரிட்டு கோர்ட்டு எண் -1 ல் ஆஐர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:-


சைலேஷ் யாதவிடம் தட்கல் சாப்ட்வேர் ஆல்.இன் என்ற 10 சட்டவிரோதமான இணையதள மென்பொருள் இருந்தது. இதனை அவர் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் மென்பொருளுக்குள் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதுபோல் மென்பொருளை உருவாக்கியவரிடம் இருந்து வாங்கி தன்னுடைய இணையதளத்தில் அறிமுகப்படுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் சுமார் 3,485 பேரிடம் 2000 முதல் 3500 வரை பெற்றுள்ளார். இந்த பத்து மென்பொருளின் மூலம் கடந்த 18 மாதத்தில் ரூ.98 லட்சத்து 20,946 அவருக்கு கிடைத்தது. இதில் மென்பொருளை உருவாக்கி தந்தவர்களுக்கு போக முப்பது சதவீதம் அவருக்கு கமிஷனாக கிடைத்துள்ளது. சைலேஷ் யாதவிருக்கு இதன் மூலம் கடந்த மாதம் 2,70,000 கிடைத்துள்ளது. மேலும் இந்த சட்டவிரதம் மென்பொருள் மூலம் ஒரு நாளைக்கு நாடு முழுவதும் சுமார் 7,000 ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 25,460 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 18 மாதங்களில் இந்த மென்பொருள்கள் மூலம் எடுக்கப்பட்ட ரயில் டிக்கெட் மதிப்பு சுமார் 56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


சைலேஷ் யாதவ் இந்த செயலில் ஈடுபடுவதற்கு 13 செல்போன் எண்களை பயன்படுத்தி உள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாப் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் சைலேஷ் யாதவுக்கு சட்டவிரோதம் மென்பொருளை விற்பனை செய்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது .இவ்வாறு அவர்கள் கூறினர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News