புறநகர் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: சென்னை – அரக்கோணம் இடையே பயோ கழிவறை, சிசிடிவியுடன் சிறப்பு ரயில் அறிமுகம்!!
புறநகர் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: சென்னை – அரக்கோணம் இடையே பயோ கழிவறை, சிசிடிவியுடன் சிறப்பு ரயில் அறிமுகம்!!
By : Kathir Webdesk
சென்னை புறநகர் ரெயில் பயணத்தை சிறப்பாக அமைக்கும் வகையில், சென்னை-அரக்கோணம் இடையே, நவீன வசதிகளுடன் கூடிய மெமு (எம்இஎம்யு) மின்சார ரெயில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. தெற்கு ரெயில்வேயில் முதன்முறையாக குறைந்த மின்செலவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட மின்சார ரெயில் இதுவாகும்.
8 பெட்டிகளை கொண்ட இந்த மின்சார ரெயில்முழுமையாக நவீன மின்னணு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் வடிமைக்கப்பட்டது. இந்த ரெயிலை தயாரிக்க ரூ.25 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2,402 பேர் பயணிக்கலாம்: பயணிகளுக்கு சிறந்த வசதியை கொடுக்கும் வகையில், இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையில், பயணிகள் தகவல் அறியும் முறை, பயோ கழிப்பறை வசதி உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, லோகோ பைலட் அறையில் முதன்முறையாக ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.