Kathir News
Begin typing your search above and press return to search.

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இனி தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

மகாகவி பாரதியார் பிறந்த தினம் இனி தேசிய மொழிகள் தினமாகக் கொண்டாடப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் இனி தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

KarthigaBy : Karthiga

  |  13 Dec 2022 7:15 AM GMT

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி உத்திரபிரதேச அரசாங்கம் வருகிற 16-ம் தேதி வரை ஒரு மாத காலம் பாரதியாரின் 141 வது பிறந்தநாளை ஒட்டி "காசி தமிழ் சங்கமம்" நிகழ்ச்சியை கொண்டாடுகிறது. பாரதியார் வாழ்ந்த வீடு 'சிவ மடம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டுக்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து அனைத்து மாநில மக்களும் வந்து கொண்டிருக்கிறார்கள் பாரதி யார்? என்று இப்போது அவர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது.


காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஒட்டி அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் முதல்முறையாக தமிழ் குரல் ஒலிக்கப் போகிறது. அந்த கோவில் வளாகத்தில் வருகிற 15-ம் தேதி இளையராஜாவின் பக்தி பாடல் இசை கச்சேரி நடக்கிறது. மேலும் மத்திய ரயில்வே மந்திரியும் "காசி தமிழ்ச் சங்கமம் விரைவுவரயில் என்ற புதிய ரயில் சேவை காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே தொடங்கப்படும்" என்று அறிவித்துள்ளார் .இந்த ரயிலை கன்னியாகுமரியில் இருந்து விட வேண்டும். இது மட்டுமில்லாமல் பாரதியார் பிறந்த தினம் இனி தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாரதியாருக்கும் பெருமை, தமிழ் மொழிக்கும் பெருமை, தமிழ்நாட்டுக்கும் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை. ஏனெனில் 22 தேசிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று.


இந்திய அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் உள்ள இந்த 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்க வேண்டும் என்ற தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையையும் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. 22 தேசிய மொழிகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் பாரதியார் பிறந்த நாளை இனி தேசிய மொழிகள் தினமாக அனைத்து மாநிலங்களும் கொண்டாடும்போது பாரதியார் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தமிழ் மொழி பற்றியும் இந்தியா முழுவதும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News