Kathir News
Begin typing your search above and press return to search.

நாமக்கல்லில் கிலோ கணக்கில் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கிலோ கணக்கில் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் கிலோ கணக்கில் எடுக்கப்பட்ட பிட் பேப்பர்கள் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 May 2022 4:56 PM IST

பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கிலோ கணக்கில் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5-ஆம் தேதி முதல் 12'ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன, அதேபோல் மே மாதம் 6'ம் தேதி முதல் 10'ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தேர்வுக்கு முன்னரே பள்ளித் தேர்வுகள் இயக்கம் மாணவர்கள் தேர்வில் விதிமுறைகளுக்கு மாறாக நடைபெற்றால் ஓராண்டுக்கு தேர்வு எழுத முடியாது என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தில் கிலோ கணக்கில் பிட் பேப்பர்கள் காப்பியடிக்க பயன்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து கிலோ அளவிற்கு காப்பி அடிக்க பயன்படுத்தப்பட்ட பிட்டு பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பாடங்கள் தொடர்பான புத்தகங்களை சிறிய அளவில் சுருக்கி மைக்ரோ பிட் பேப்பர்களாக தயாரித்த ஜெராக்ஸ் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது எந்த பள்ளியின் அருகில் நடந்தது யார் இதற்கு காரணம் என விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்க பாய்வதும், ரகளையில் ஈடுபடுவதும், பெண்கள் குடித்து விட்டு நடப்பது போன்ற வீடியோக்கள் பரவி வரும் நிலையில் தற்போது தேர்வு நடைபெறும் சமயங்களில் பிட் பேப்பர் கிலோ கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Source - Nakeeran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News