Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பார்: இந்தியா டிவி-சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பு!

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பதவி ஏற்பார் என்று டிவி.சி.என் எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பார்: இந்தியா டிவி-சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பு!

KarthigaBy : Karthiga

  |  8 March 2024 6:34 AM GMT

2024 மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெறும் .நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்று இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .அதன்படி பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது .அதே சமயம் இந்தியா கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


பிப்ரவரி ஐந்து முதல் 23 வரை 543 மக்களவைத் தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பா.ஜ.க கடந்த மக்களவை தேர்தலை காட்டிலும் இப்போது நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த 2019ல் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் இந்த எண்ணிக்கை 335 ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ,டெல்லி ,உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .


பீகாரில் 40 தொகுதிகளில் 17 இடங்களையும் ஜார்க்கண்டில் 14 தொகுதிகளிலும் ஒடிசாவில் 21 இல் பத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் கட்சியாக உள்ள அசாமில் 14 தொகுதிகளில் 10 இடங்கள் கட்சியின் வசமாகும் .மகாராஷ்டிராவில் 48இல் 25 தொகுதிகளையும் , மேற்குவங்கத்தில் 42 ல் 20 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 21 இடங்களை பெறும் என்று இந்தியா டிவிசிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு நிலவரம் :தமிழ்நாட்டில் திமுக 20 ,காங்கிரஸ் ஆறு, அதிமுக 4 ,பாஜக 4, பாமக 1 பிற கட்சிகள் நான்கு தொகுதிகளை வெல்வார்கள் என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :Thinathamizh

Next Story
கதிர் தொகுப்பு
Trending News