மாநிலத்தை மேம்படுத்த துப்பில்லை: இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறை கூறுவதா ? மம்தாவுக்கு பாஜக நெத்தியடி பதில்
மாநிலத்தை மேம்படுத்த துப்பில்லை: இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறை கூறுவதா ? மம்தாவுக்கு பாஜக நெத்தியடி பதில்
By : Kathir Webdesk
ஊழல், கறுப்புப் பணம், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 3 ஆண்டுகள் முடிகிறது என்பதால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இது பற்றி கூறுகையில் “
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நாளில் இருந்து பொருளாதார சீரழிவு தொடங்கிவிட்டது, இப்போது எங்கு வந்து முடிந்திருக்கிறது பாருங்கள். வங்கிச்சிக்கல், பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், விவசாயிகள் முதல் இளம் தலைமுறையினர் வரை, தொழிலாளர் முதல் வர்த்தகர்கள், பெண்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் " எனத் தெரிவித்தார்
முதல்வர் மம்தா பானர்ஜியின் விமர்சனத்துக்கு பாஜக பொதுச்செயலாளர் சயான்தன் பாசு பதில் அளித்து கூறுகையில், " மம்தா அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பதிலாக, உறுதியான நடவடிக்கை எடுத்து மாநிலத்தின் பொருளாதார சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது சிறப்பாக இருக்கும்.
உலகப் பொருளாதார சிக்கல் காரணமாகவே இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, நம் நாட்டுப் பொருளாதாரம் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு புரியாத விஷயத்தில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
மம்தா பானர்ஜி அரசில் ஒரு தொழிற்சாலையாவது மாநிலத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறதா. மாநிலத்தில் தொழில்சூழலையும், பொருளாதார சூழலையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை, இதில் மத்திய அரசை குறை கூறுவதா? முதலில் வளர்ச்சி நடவடிகைகளை எடுங்கள் " என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.