கேட்காமல் காவிரியை அனுப்பி வைத்த எடியூரப்பா - திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை, விவசாயிகள் மகிழ்ச்சி.! #BJP #Kaveri #Karnataka
கேட்காமல் காவிரியை அனுப்பி வைத்த எடியூரப்பா - திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை, விவசாயிகள் மகிழ்ச்சி.! #BJP #Kaveri #Karnataka

தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் காவிரிப் பிரச்சினை ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த ஒன்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு பல ஆண்டுகளாக போராடி வந்தது. விடிவு காலமாக, மத்திய பாஜக அரசு அதை அமைக்க ஒப்புதல் அளித்து 2018ல் அரசிதழில் வெளியிட்டது. எடியூரப்பா தலைமையில் கர்நாடகாவில் பாஜக அரசு அமைந்த பிறகு இந்த பிரச்சினைகளும், வருடா வருடம் நடக்கும் பலூன் விடும் போராட்டங்களும் ஓய்ந்துள்ளன.
கடந்த ஆண்டு 2019 ஜூன் மாதத்திலிருந்து 2020 மே மாதம் வரை கர்நாடகம் தரவேண்டியது 177.25 டி.எம்.சி. ஆனால் அந்த அளவையும் தாண்டி 275 டி.எம்.சி. நமக்குக் கிடைத்துள்ளது. இப்படி கர்நாடகம் உபரி நீரை நமக்குத் திறந்து விட்டதால் முந்நூறு நாட்களுக்கும் மேலாக மேட்டூரில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருப்பு இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
இந்த வருடமும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுப்பதற்கு முன்பாகவே எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு , தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதைப் பாராட்ட யாருக்கும் ஏன் மனமில்லை என பாஜக தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் மாத 9 டி.எம்.சி.
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 12, 2020
ஜூலை மாத 31 டி.எம்.சி
40 டி.எம்.சி தண்ணீர் காவிரி மேலாண்மை வாரிய உத்திரவில் தமிழகத்திற்கு
திறந்து விடப்படுகிறது.
கருப்பு பலூன், கொடி காட்டி
Sh @narendramodi ஐ அவமதித்த
கட்சிகள், தலைவர்கள் இதுபற்றி கண்டு கொள்ளாதது
ஏன்? @PMOIndia @BJP4TamilNadu
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கடந்த ஜூன் 8-ம் தேதி கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 700 அடியும் கபினி அணையில் இருந்து 1,300 கன அடி என மொத்தம் 2 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும். அதன்படி, கர்நாடகாவில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திறந்த விடப்பட்ட 2 ஆயிரம் கன அடி நீர், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நேற்று 1,292 கன அடி வந்த கன அடி வந்த நிலையில், நேற்று(14ம் தேதி) காலை நீர்வரத்து அதிகரித்து, 1,643 கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை உரிய காலமான ஜூன் 12-ல் திறக்கப்பட்டது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டுதான் ஜூன் 12- ல் திறக்கப்பட்டது. மற்றபடி கர்நாடகத்தின் ஒத்துழையாமையால் அணைக்குப் போதிய தண்ணீர் வரத்து இல்லாமல் போய் காலம் கடந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்தான் அணை திறக்கப்படும். அதை வைத்து ஒருபோகமாகச் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறும். காலத்தில் தண்ணீர் திறக்காததால் குறுவை சாகுபடி என்பதே குறைந்து போய்விட்டது. இந்த ஆண்டு ஜூன் 12-ல் அணை திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறும். இதனால் இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிக்கும். அத்துடன், மழைக்காலத்தில் வீணாகும் உபரி நீரைக்கொண்டு காவிரிக் கரை நெடுகிலும் உள்ள 100 ஏரிகளை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Featured Image Courtesy: News18Tamil