பிரக்யா தாகூர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க செயல் தலைவர் ஜேபி நட்டா!
பிரக்யா தாகூர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க செயல் தலைவர் ஜேபி நட்டா!
By : Kathir Webdesk
எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மஹாத்மா காந்தியை கொன்றது ஏன் என நாதுராம் கோட்சே கூறியதை சுட்டிக் காட்டி பேசினார் அப்போது குறிக்கிட்ட பா.ஜ.க பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் "ஒரு தேசபக்தரை உதாரணமாக கூறக்கூடாது" என்றார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன, ராஜா பேசியது மட்டுமே சபைக் குறிப்பில் இடம்பெறும் பிரக்யாசிங் தாக்கூர் பேசியது அவை குறிப்பில் இடம் பெறாது என என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர விட்டார்.
இது குறித்து பேட்டியளித்த பா.ஜ.க செயல் தலைவர் ஜேபி நட்டா, பிரக்யா தாகூர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவர் இதுபோன்ற ஏன் எந்த செயலுக்கும் பா.ஜ.க ஆதரிப்பதில்லை என்று தெரிவித்தார்,பாதுகாப்பு தொடர்பான நாடளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவதாக அறிவித்தார்,மற்றும் இன்று பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் யாரேனும் நாதுராம் கோட்சேவை தேச பக்தர்கள் என்று சொன்னார் பா.ஜ.கவும் கண்டிக்கும் என்று சொன்னார் நாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வது காந்தியை என்று பேசினார்.