Kathir News
Begin typing your search above and press return to search.

172 பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - பிரதமர் பிறந்த நாளை எளியோருக்கு உதவிகள் செய்து கொண்டாடும் SG.சூர்யா!

பிரதமர் பிறந்த நாளில் நேற்று 172 பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பா.ஜ.க மாநில செயலாளர் SG. சூர்யா அவர்கள் வழங்கினார்.

172 பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - பிரதமர் பிறந்த நாளை எளியோருக்கு உதவிகள் செய்து கொண்டாடும் SG.சூர்யா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Sep 2022 7:39 AM GMT

உலகம் போற்றும் உன்னத தலைவர் ஆன பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சார்பில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று, சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட செம்மாஞ்சேரி பகுதியில் உள்ள பா.ஜ.க தென்கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த 172 பள்ளி மாணவர்களுக்கு ஒரு புத்தகப்பை மற்றும் ஒரு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில் அடங்கிய கல்வித் தொகுப்பை பா.ஜ.க மாநில செயலாளர் SG. சூர்யா அவர்கள் வழங்கினார்.


பா.ஜ.க சென்னை கிழக்கு மாவட்டம், செம்மஞ்சேரியில் 172 பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் ஆகியவை அடங்கிய தொகுப்பு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க மாநில செயலாளர் SG. சூர்யா அவர்களின் சார்பில் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறைவாக பங்கேற்ற அனைவருக்கும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பாரதி சேவை பொறுப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க இளைஞரணி மாநில பொருளாளர் திரு. நவீன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சி நிறைவு செய்தார் SG.சூர்யா அவர்கள். பாரதி சேவை மையம் மற்றும் சேவா பாரதி தன்னார்வ தொண்டாளர்கள் இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Twitter source

Next Story
கதிர் தொகுப்பு
Trending News