Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக அபார வெற்றி பெற்று இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி அமைக்கும் ! தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளிலும் உறுதி!!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2019 11:49 AM IST

மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஹரியானா மாநிலத்திலும் நேற்று சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளிவந்தன. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும் இரு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. அதில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், ஹரியானாவிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அபார வெற்றி பெற்று இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி அமைக்கும் ! தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளிலும் உறுதி!!

டைம்ஸ்நவ் சேனலின் கருத்துக் கணிப்பின்படி மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளை மட்டுமே பெரும் எனக் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் 18 மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 243 தொகுதிகளிலும் , காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தியா டுடேவுடன் இணைந்து ஆக்ஸிஸ் நிறுவனம் நடத்திய கணிப்பில் பாஜக 166 முதல் 194 இடங்கள் வரையும், காங்கிரஸ் கூட்டணி 72 முதல் 90 இடங்களைக் கைப்பற்றும் என்றும்,

பாஜக அபார வெற்றி பெற்று இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி அமைக்கும் ! தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளிலும் உறுதி!!

ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 216 முதல் 230 வரையிலான இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 52 முதல் 59 வரையிலான இடங்களிலும் வெற்றி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 71 இடங்களையும், காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே பெறும் என டைம்ஸ் நவ் சேனல் தெரிவித்துள்ளது.

இதேபோல் நியூஸ் 18 மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 52 முதல் 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 முதல் 19 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.

This is a Translated Article From OP INDIA

Next Story
கதிர் தொகுப்பு
Trending News