Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜனதா அமோக வெற்றி பெறும் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்

குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று இமாச்சலப் பிரதேசத்தில் இழுபறி நிலவும் என்றும் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜனதா அமோக வெற்றி பெறும் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்

KarthigaBy : Karthiga

  |  6 Dec 2022 5:45 AM GMT

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. குஜராத் மாநிலத்தில் கடந்த 1ம் தேதியும் நேற்றும் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது பெரு மாநிலங்களிலும் எட்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது நேற்று குஜராத்தில் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் இரண்டு மாநிலங்களிலும் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன பெரும்பாலான கணிப்புகள் குஜராத்தில் பா ஜனதா அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் இமாசலப் பிரதேசத்தில் இழுபறி நிலவும் என்றும் தெரிவிக்கின்றன குஜராத்தில் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 182 ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 92 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் ஒவ்வொரு சேனலும் நடத்திய கணிப்புகளின் முடிவுகள் வருமாறு.

குஜராத்

நியூஸ் எக்ஸ் - ஜன்கி பாத்:- பா.ஜனதா 117 -140 தொகுதிகள் காங்கிரஸ் 34 - 51 ஆம் ஆத்மி-6-13.

ரிபப்ளிக் டிவி பி-மார்க் :- பா.ஜனதா 128- 148 காங்கிரஸ் 32 - 42 .ஆம் ஆத்மி 2 -10

டிவி9 குஜராத்தி:- பா ஜனதா - 125-130, காங்கிரஸ்- 40-50, ஆம் ஆத்மி-3 -5

இமாசலபிரதேசம்

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்த தொகுதிகள் 68 ஆகும். குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த பக்கமும் சாயும் அளவிற்கு வெற்றிபெற இழுபறியாக உள்ளது.

ஆஜ்தக்-ஆக்சிஸ் மை இந்தியா:-பா.ஜனதா-24-34. காங்கிரஸ் -30-40

இந்தியா டிவி:- பா. ஜனதா - 35- 40 காங்கிரஸ் 26 - 31 ஆம் ஆத்மி 0.

நியூஸ் எக்ஸ்- ஜன்கிபாத் :- பா.ஜனதா 32 - 40. காங்கிரஸ் 27 - 34.

ரிபப்ளிக் டி.வி பி-மார்க்:- பா.ஜனதா 34 - 39 காங்கிரஸ் 28 - 33.

டைம்ஸ் நவ்:- பா- ஜனதா- 38 , காங்கிரஸ்- 28.

டெல்லி மாநகராட்சி தேர்தல்

டெல்லியில் , மூன்று மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில் கடந்த நான்காம் தேதி தேர்தல் நடந்தது நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மொத்த வார்த்தைகள் எண்ணிக்கை 250 இதெல்லாம் ஆத்மி சமூக வெற்றி பெறும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன 15 ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்தில் வந்த பா.ஜனதா அதிகாரத்தை இழக்கிறது.இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா:- ஆம் ஆத்மி-149 முதல் 171 வார்டுகள். பா.ஐனதா - 69- 91. காங்கிரஸ் -3-7 .டைம்ஸ் நவ் - இ.டி.ஜி. ஆம் ஆத்மி - 146 -156 பா.ஜனதா-84 -194 காங்கிரஸ் -6-10.







Next Story
கதிர் தொகுப்பு
Trending News