திருச்சி தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க. மகளிர் அணியினர் பாதபூஜை, மாலை அணிவித்து வேட்டி, சேலை வழங்கினர்.!
திருச்சி தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க. மகளிர் அணியினர் பாதபூஜை, மாலை அணிவித்து வேட்டி, சேலை வழங்கினர்.!

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொண்டாலும், இந்த நேரத்திலும் தினமும் வீடுகள், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என தேடி வந்து குப்பைகளை வாங்கியும், சாலைகள் பொது கழிப்பிடங்கள் அவற்றை தூய்மை செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் திருச்சி மாநகரில் பீமநகர் பகுதியில் பாஜக சார்பில் பெண்கள் பாத பூஜை செய்தனர். மாவட்ட தலைவர் கவுதமன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கண்காணிப்பாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மலர் தூவி, பாத பூஜை செய்து, மாலை அணிவித்தனர். பின்னர் அவர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் காய்கறி தொகுப்புகளையும் வழங்கினர்.
பாஜகவினரின் இது போன்ற அங்கீகாரம், பாராட்டு எங்களை சோர்வில்லாமல் பணியாற்ற ஊக்கப்படுத்துவதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் பாஜகவினரால் சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களும் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.