Kathir News
Begin typing your search above and press return to search.

'இந்து மதத்தை கேவலமாக பேசிவிட்டு தேரில் கைவைப்பதா?' - குமரக்கோவில் தேரோட்டத்தில் தி.மு.க'விற்கு பயத்தை கட்டிய பா.ஜ.க

குமாரகோவில் வைகாசி தேர்த்திருவிழாவில் தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் தேரின் வடம் பிடித்து இழுக்க எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க'வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து மதத்தை கேவலமாக பேசிவிட்டு தேரில் கைவைப்பதா? - குமரக்கோவில் தேரோட்டத்தில் தி.மு.கவிற்கு பயத்தை கட்டிய பா.ஜ.க

Mohan RajBy : Mohan Raj

  |  11 Jun 2022 7:15 AM GMT

குமாரகோவில் வைகாசி தேர்த்திருவிழாவில் தி.மு.க அமைச்சர் மனோ தங்கராஜ் தேரின் வடம் பிடித்து இழுக்க எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க'வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும், இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவில் நாளை 12ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு தினசரி அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது ஒன்பதாம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது 7 மணிக்கு தேர் வடம் தொட்டு இழுக்க தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பாரம்பரியமாக யானை கொண்டு வந்த தேரில் போடுகின்ற தடியை எடுத்து ரதவீதிகளில் போடுவது வழக்கம் இந்த ஆண்டு தடியைக் கொண்டு வர யானை வரவில்லை, அதுமட்டுமில்லாமல் கடந்த பத்து நாட்களும் யானைமேல் கும்பம் வைத்து கொண்டு வரப்பட்ட அபிஷேகம் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டியது இயல்பு அதில் கூட யானை வரவில்லை. அந்த அளவிற்கு அறநிலையத்துறை திருவிழாவில் நடத்துவதை நடத்தியது.

இந்த நிலையில் வெளியில் கடவுளையும், இந்து மதத்தை பழித்து பேசும் தி.மு.க'வினரும், தி.மு.க அமைச்சரும் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடாது தேரை வடம் பிடித்து இழுக்கக் கூடாது. என நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் பா.ஜ.க'வினர்.

பா.ஜ.க'வினர் உடன் சேர்த்து இந்துமத ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து குமாரகோவில் தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களை தேரினை வடம் பிடித்து இழுக்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி அவர்கள் தி.மு.க அரசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Source - One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News