Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் புளூ டிக் கட்டண சேவை மீண்டும் 29ஆம் தேதி அமலாகிறதா?

புளூ டிக் கட்டண சேவை வருகின்ற 29ஆம் தேதி முதல் அமலாகிறது என்று எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ட்விட்டரில் புளூ டிக் கட்டண சேவை மீண்டும் 29ஆம் தேதி அமலாகிறதா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  17 Nov 2022 6:57 AM GMT

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக ட்விட்டர் மாறி இருக்கிறது. வரும் காலங்களில் இதில் பல்வேறு மாற்றங்களை செய்ய செய்வதாகவும் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக கணக்கிற்கு பயன்படுத்தப்படும் புளூ டிக் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.


இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1,600 வரை கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு பல மிகக் கடுமையான வகையில் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக அமெரிக்காவில் பல்வேறு கண்டடங்கள் எழுந்தது. வர்த்தக ரீதியாக தற்பொழுது எட்டு டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 660 கட்டணம் வசூலிக்க இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருந்தது.


கட்டணம் செலுத்துவோர் வீடியோ ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்று சலுகைகளும் கட்டணம் செலுத்துவோர் வீடியோ ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவு செய்யலாம் என்று சலுகைகளும் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. இந்த சேவை இந்தியாவில் பெற மாதம் ₹. 660 என கூறப்பட்டு வந்தது. ட்விட்டர் ப்ளூ டிக் சேவை பணம் கொடுத்து யாராவது இதனை தவறாக பயன்படுத்தினால், அவர்களின் கட்டண தொகை இழக்க நேரிடும் என்றும் அவர் கணக்கு முடக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதன்படி, டுவிட்டரில் தற்போது மஸ்க் வெளியிட்ட செய்தியில், புளூ டிக் குறிகளை ஏற்கனவே பெற்றவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்தி அந்த சேவையை தொடர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. ஏனெனில் வருகின்ற 29ஆம் தேதி முதல் இது அமலாக்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News