Kathir News
Begin typing your search above and press return to search.

மாண்புமிகு மத்திய உருக்குத்துறை அமைச்சருடன் BMS நிர்வாகிகள் சந்திப்பு!!

மாண்புமிகு மத்திய உருக்குத்துறை அமைச்சருடன் BMS நிர்வாகிகள் சந்திப்பு!!

மாண்புமிகு மத்திய உருக்குத்துறை அமைச்சருடன் BMS நிர்வாகிகள் சந்திப்பு!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Sep 2019 5:49 AM GMT


23/9/19 திங்கட்கிழமை அன்று டெல்லியில் BMS உயர்நிலைக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது அதில் அகில பாரத BMS பொதுச்செயலாளர் ஸ்ரீ வீர்ஜெஸ் உபாத்யாயா ஜி, அகில பாரத BMS அமைப்பு செயலாளர் ஸ்ரீ சுரேந்திரன் ஜி, சேலம் உருக்காலை BMS சார்பாக K. இளங்கோஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அகில பாரத BMS தலைவர்கள் சேலம் உருக்காலை VISL & ASP ஆலைகளை நேரில் வந்து கள ஆய்வு செய்த பின் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



அதன் பின்னர் அன்று மாலை மாண்புமிகு உருக்குத் துறை அமைச்சர் ஶ்ரீ.தர்மேந்திர பிரதான்ஜி அவர்களை BMS நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
சேலம் உருக்காலை, VISL & ASP ஆலைகளை தனியாருக்கு விற்கக் கூடாது,தொடர்ந்து பொதுத்துறையிலேயே லாபத்தில் இயக்குவதற்கான புத்துருவாக்கம் (Revival Plan) செய்திட வேண்டும்,ஆலைகளில் தேங்கியுள்ள STOCKS முழுவதையும் உடனடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,NJCS சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக இறுதி செய்ய வேண்டும், சேலம் உருக்காலைக்கு வழங்கப்பட்டுள்ள வட்டியுடன் கூடிய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்று BMS கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவினை அமைச்சர் அவர்களிடம் அளித்து வலியுறுத்தினார்கள்.



மாண்புமிகு அமைச்சர் அவர்கள் NJCS சம்பள பேச்சுவார்த்தையை இறுதி செய்யவும் STOCK-யை குறைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆலைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளையும், கடனை தள்ளுபடி செய்வதற்காகவும் Group of Ministers-களிடம் கலந்தாலோசிப்பதாக உறுதி அளித்தார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News