மசூதியில் பதுக்கப்பட்ட குண்டுகள் வெடிப்பு சம்பவம்! முன்னாள் இராணுவ அதிகாரி டாக்டர். அஷ்பாக் கைது!
மசூதியில் பதுக்கப்பட்ட குண்டுகள் வெடிப்பு சம்பவம்! முன்னாள் இராணுவ அதிகாரி டாக்டர். அஷ்பாக் கைது!
By : Kathir Webdesk
மசூதியில் பதுக்கப்பட்ட குண்டுகள் வெடிப்பு சம்பவம் : முன்னாள் இராணுவ அதிகாரி டாக்டர்.அஷ்பாக் கைது!
உத்தரபிரதேசத்தில் சென்ற திங்கள் கிழமை குஷினகரில் உள்ள ஒரு மசூதியில் இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டிடம் சேதமானது, இது தொடர்பாக மசூதியின் மதகுரு உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேர் தலைமறைவானார்கள்..
இந்த சம்பவத்தில் மசூதியின் மதகுரு ஹாஜி குதுபிதீனின் பேரன் டாக்டர்.அஷ்பாக்கின் பங்கு இருப்பதாக கூறப்பட்டது. அஷ்பக் இந்திய ராணுவத்தில் ஹைதராபாத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். அவர் சமீபத்தில் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் வரும்போது அங்கிருந்து வெடிபொருள்களை கொண்டு வந்து தாத்தா ஹாஜி குதுபிதீனின் உதவியுடன் மசூதியில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை விசாரணையில் ஹாஜி குதுபிதீன் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் தலைமறைவான ஓய்வுபெற்ற அதிகாரி அஷ்பாக் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக விசாரணை அதிகாரிகள் கூறினர். அயோத்தி தொடர்பான தீர்ப்புக்கும் மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிகிறது.
என்றாலும் மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வெடித்த குண்டுகளின் பாகங்கள் ஆக்ராவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். மசூதிக்குள் வெடி குண்டுகள் தயாரிக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அதற்காக அங்கு சேகரிக்கப்பட்ட பொருள்கள்தான் வெடித்து சிதறியிருக்கலாம் எனவும் போலீசார் கூறினர்.