நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணத்திற்கு பின்பான வாழ்வின் மர்மம் – புத்தக விமர்சனம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணத்திற்கு பின்பான வாழ்வின் மர்மம் – புத்தக விமர்சனம்
By : Kathir Webdesk
Conundrum:
Subash Bose’s life after death
பத்திரிகையாளர்கள்
அனூஜ் தாரும், சந்த்ரசூர் கோஷிம் ஆகியோரின் பதினைந்து வருட உழைப்பின் பயனாக
வெளிக்கொணர்ந்த புத்தகம் Conundrum : Subash Bose’s life after death. இந்த புத்தகம் இதுவரை சுபாஷின் மரணத்தைப் பற்றி வந்த பல
புத்தகங்களில் மிக அழுத்தமான ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கிறது.
மிக முக்கியமாக உ.பி யில் குன்னாமி பாபா என்ற பெயரில் வாழ்ந்த ஒரு சாது
பற்றி அதிகமாக ஆராய்ந்து இருக்கிறது இப்புத்தகம். அவரது நெருங்கிய வட்டாரங்கள் அவரை பகவான்ஜி
என்று அழைத்தனர். உ.பியில் பைசாபாத் நகரத்தின் ஒரு கட்டிடத்தில் ஒரு சிறிய
வீட்டில் தனியறையில் வாழ்ந்து வந்தார். விரல் விட்டு எண்ணக்கூடிய அவரது பக்தர்கள் தவிர வேறு யாரும்
அவரைப் பார்த்தது கிடையாது.
அவரின் தோற்றம், உயரம்,
பல் வரிசையில் உள்ள இடைவெளி எல்லாமே அவரை சுபாஷ்
தான் என்று உறுதி செய்யும்படி
இருந்திருக்கிறது.
இது போன்ற
எண்ணற்ற தகவல்களை பக்கத்திற்கு பக்கம் சம்பந்தப்பட்டவர்களின் பேட்டி, கடிதங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து
வெளியிட்டிருக்கிறார்கள்.
பகவான்ஜி நேதாஜி சுபாஷ் தான் என்பதற்கு இதைவிட அழுத்தமான ஆதாரமாக அவரை நேரில்
சந்தித்தவர்களின் பேட்டியை பிரித்திருக்கிறார்கள். மேலும் அவரது புத்தக வாசிப்பு, ஆங்கில அறிவு, உலக வரலாற்று அறிவு, கையெழுத்து அவர் காலத்திலிருந்த புகைப்படங்கள், பொருட்கள் போன்றவற்றையும், மாவோ வை ஆதரித்தும் நேருவை எதிர்த்தும், காந்தியுடனான
தொடர்பும் அரசாங்க
விவகாரங்களில் அவர் பெற்றிருந்த
அறிவும், அவர் நேதாஜி தான் என்பதை உறுதி செய்வதாக நூலாசிரியர்கள்
தெரிவிக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல்
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் எப்படி நேதாஜியின் மறைவை
வெளிக்கொண்டு வரும் முயற்சியை தட்டிக் கழித்தது என்றும்
தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த
புத்தகம் 1980இல்
பகவான்ஜி இறந்த போதிலிருந்து
தொடங்குகிறது. அங்கிருந்த ஆரம்பித்து பல தகவல்கள் சொல்லிக்
கொண்டு போகிறது இந்த புத்தகம்.
இதிலிருக்கின்ற தகவல்கள் நூலாசிரியர்களின் திறமையையும்
உழைப்பையும் காட்டுகிறது.
அவரின் கையெழுத்து பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு தலைப்பின் கீழ் விரிவாக எழுதி
இருக்கிறார்கள் இது போக பகவான்ஜி இந்தோ-சீனா போர் பற்றி விரிவாக எழுதி இருப்பதையும் தலாய்லாமா இந்தியா தப்பி வர உதவி செய்தது பற்றியும் எழுதி இருக்கிறார்கள். . ரஷ்யா, வியட்னாம், சீனா மற்றும் சிஎப் பின் ஆவணங்களில் இருந்து
கூட நிறைய தகவல்களை திரட்டி இருக்கிறார்கள்.
இது
புத்தகம் என்பதையும் தாண்டி ஒரு ஆய்வறிக்கை போலவே அமைந்திருக்கிறது. சில தகவல்களையும் அனுபவங்களையும்
இன்றும் கவனமாக மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது என்றாலும் இந்த புத்தகம்
நேதாஜியின் மர்மமான வாழ்வின் பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டத்தான் செய்கிறது.
நன்றி: http://www.pragyata.com/mag/conundrum-subhas-boses-life-after-death-819