பழமையான கோவில் இடிப்பு-கோவில்கள் மீது தொடரும் தாக்குதல்!
Top Stories.
By : Shiva
சிதம்பரத்தில் பள்ளியின் வாசலில் இருந்த 200 ஆண்டு காலம் பழமையான கோவிலை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலை மீண்டும் கட்டித் தருமாறு பாஜக மற்றும் ஹிந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு முன்பு ஊர் பொதுமக்கள் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தனர். பல ஆண்டுகளாக இந்த கோவில் பள்ளிக்கு முன்பு இருந்த போதிலும் பள்ளிக்குச் சென்றுவரும் மாணவிகளுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால் தற்போது பள்ளிக்கு சிரமம் ஏற்படுத்துவதாக கூறி அந்த கோவிலை பொக்லின் இயந்திரம் கொண்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்துள்ளனர்.
பழமையான கோவிலை அதிகாரிகள் இடித்து விட்டதால் அந்தக் கோவிலின் பூசாரி அந்த கோவிலை விட்டு செல்லாமல் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல ஆண்டுகளாக பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே இருக்கும் இந்த கோவில் மாணவிகளுக்கு எந்த ஒரு சிரமமும் ஏற்படுத்தாத நிலையில் தற்போது இந்த கோவிலை இடிப்பதற்கான காரணம் என்ன என்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் ஊர் பொதுமக்கள் வழிபட்டு வரும் அந்த கோவிலை இடித்த இடத்திலேயே மீண்டும் கட்டித் தருவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலை விட்டு வெளியேற மாட்டேன் என்று பூசாரி அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிதம்பரத்தில் பரபரப்பு ஸ்ரீ மௌன சுவாமிகள் மட வாசலில் உள்ள 200ஆண்டு பழமையான கோவிலை இடித்து சுவாமி சிலைகளை அப்புறப்படுத்த போலீஸ் முயற்சி சுவாமிகள் அந்த இடத்தை விட்டு போக மாட்டேன் மீண்டும் கோவிலை அரசு கட்டித்தர வேண்டும் என்று தர்ணா போராட்டம்
களத்திலிருந்து கார்த்திகேயன் pic.twitter.com/fiztmavSMP