சீரமைக்கப்பட்ட இந்து கோவில் இந்துக்களிடம் ஒப்படைப்பு!
சீரமைக்கப்பட்டு இந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
By : Shiva
பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்துக்கோவில் அடித்து உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட கோவில் தற்போது சீரமைக்கப்பட்டு இந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங்க் நகரில் பழமையான இந்துக் கோவில் ஒன்று உள்ளது. பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது அவ்வப்போது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வசித்து வருவதால் அவர்களை மதம் மாற்றும் நடவடிக்கைகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள இந்து கோவிலுக்கு அருகே உள்ள மதராசாவில் இஸ்லாமியர்களின் சமய நூல்களை வைத்திருக்கும் அறையில் இந்து சிறுவன் ஒருவன் சிறுநீர் கழித்ததால் அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் இஸ்லாமியர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அந்த சிறுவனுக்கு ஜாமீன் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்திய அவர்கள் கோவிலில் இருந்த சிலைகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தின்போது கோவிலில் இருந்த கதவுகள்,கடவுள் சிலைகள் மற்றும் கோவில் சுவர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 90 பேரை கைது செய்தனர்.
இதிலிருந்து அரசு தரப்பில் கோவில் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன. பணிகள் முழுமை அடைந்ததால் கோவில் மீண்டும் இந்துக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Source: Dinamalar
Image courtesy : Dinamalar