உபி முதல்வர் யோகியை காப்பியடித்த ஸ்டாலின்-இதுல பில்டப் வேற !
MK Stalin Copies UP CM's Governance.
By : Shiva
தமிழகத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் புத்தகப் பையில் முந்தைய முதல்வர்களின் படங்களே இருக்கட்டும் என்று ஸ்டாலின் அறிவித்ததால் அவரை புகழ்ந்து தள்ளும் ஊடகங்கள் இதற்கு முன்னோடியாக இருந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பவர் தான் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன.
சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதற்கு பதில் அளித்து பேசினார். அப்போது மாணவர்களுக்கு அளிக்கும் புத்தக பையில் முந்தைய முதலமைச்சர்கள் புகைப்படம் இருந்து விட்டு போகட்டும், அதை மாற்ற ரூ.13 கோடி செலவு செய்ய வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதை ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வரும் நிலையில் இந்த நடவடிக்கைக்கு முன்னுதாரணமாக இருக்கும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பற்றி செய்தி வெளியிட மறந்து விட்டதா என்று பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற போது மாநிலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக கொடுக்கப்பட இருந்த புத்தகப் பையில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் புகைப்படம் இருந்தது. சுமார் 35 ஆயிரம் புத்தகப் பைகளில் அகிலேஷ் யாதவின் புகைப்படம் இருந்ததை மாற்ற வேண்டாம் என்றும் அவர் புகைப்படம் இருக்கும் புத்தகப்பையையே மாணவர்களுக்கு அளிக்கலாம் என்றும் முதல்வர் யோகி தெரிவித்திருந்தார். புகைப்படத்தை நீக்க அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படும் என்பதே இதற்கு காரணம்.
எப்போதும் முதல்வர் யோகியை பழித்துப் பேசும் தமிழ் ஊடகங்கள் இது பற்றி செய்தி வெளியிடாததில் ஆச்சரியமில்லை. ஆனால் தற்போது தமிழகத்திலும் அதே முறை கடைப்பிடிக்கப்படுவதை "இந்தியாவிலேயே முதல் முறையாக" என்று சன் டிவி திரைப்படம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து செய்தி வெளியிடுவது ஊடக தர்மத்தை வெட்டவெளிச்சமாக்கி விட்டது.
பாஜக முதலமைச்சரின் செயலை காப்பி அடித்து விட்டு ஏதோ திமுக தான் இந்தியாவிலேயே முன்னோடி என்பது போல செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன திமுக குடும்ப மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள்.
Source :IndiaToday