தாலிபான்களுக்கு ஆதரவாக பதிவு-14 பேர் கைது !
இந்நிலையில் தீவகரவாதிகளான தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
By : Shiva
தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மருத்துவ மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த வெளிநாட்டினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று இந்தியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் பாதுகாப்பாக இந்தியா கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில் தீவகரவாதிகளான தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாகவும் தாலிபான்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிடாத ஊடகங்களுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் 17 பேர் கருத்து பதிவு செய்திருந்தனர். அவர்களில் 14 பேரை தற்போது அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்த 14 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் தமிழ்நாட்டிலும் தாலிபான்களுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Source : Polimer news