#Breaking : கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 'இருட்டுக்கடை அல்வா' உரிமையாளர்!
#Breaking : கொரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 'இருட்டுக்கடை அல்வா' உரிமையாளர்!

அல்வாவுக்கு புகழ் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் அல்வா வாங்குவதற்கென்றே வெளியூரிலிருந்து வரும் மக்கள் கூட வரிசையில் நின்று சில சமயங்களில் கிடைக்காமல் திரும்பிச் செல்லும் அளவு புகழ் பெற்றது இருட்டுக்கடை.
இந்தக் கடையின் உரிமையாளர் ஹரி சிங் உடல்நலக் குறைவு காரணமாக நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதியானதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி மருத்துவமனையிலிருந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், கொரோனா தோற்று இருப்பது உறுதியானால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இனிப்பு பிரியர்களையும் பொதுமக்களையும் இச்செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் ஹரி சிங்கின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்தும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறியும் பயன்பாட்டாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.