Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கன் குண்டுவெடிப்பு தாக்குதல்: அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி !

காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலை முன்னிட்டு அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் குண்டுவெடிப்பு தாக்குதல்: அரைக்கம்பத்தில் பறக்கும் அமெரிக்க கொடி !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Aug 2021 1:51 PM GMT

தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் தற்போது வந்துள்ளது. இதனை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். காபூல் விமான நிலையத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, காபூல் விமான நிலையம் ஆனது, அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பின் காபூலில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு அமெரிக்கப் படைகள் முழுவதும் திரும்பப்பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்து இருந்தார்.


இதனால், ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்துள்ளனர். இதற்கிடையில், காபூல் விமான நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 73 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களும் அதில் அடங்குவார்கள். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், வருகிற 30ம் தேதி வரை அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input:https://news.com/article/europe-middle-east-business-kabul/

Image courtesy:APnews


Next Story
கதிர் தொகுப்பு
Trending News