ஆப்கானில் மீண்டும் குண்டுவெடிப்பு- பதற்றத்தில் மக்கள்!
Breaking News
By : Shiva
ஆப்கன் தலைநகர் காபூலில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பல்வேறு தரப்பு மக்கள் வெளியேறி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அங்கு நடந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதால் நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானை தீவிரவாதிகள் கைப்பற்றிய பிறகு அங்கு பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இத்தகைய ஆபத்தான சூழலில் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : Dinamalar