Kathir News
Begin typing your search above and press return to search.

வாழ்வாதாரத்தை பறித்த திமுக செயலாளர் ! சட்டப்பேரவை வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற கேபிள் ஆப்ரேட்டர் !

Breaking News.

வாழ்வாதாரத்தை பறித்த திமுக செயலாளர் ! சட்டப்பேரவை வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற கேபிள் ஆப்ரேட்டர் !
X

TamilVani BBy : TamilVani B

  |  9 Sept 2021 4:30 PM IST

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அம்மாபேட்டை பகுதியில் கேபிள் டிவி ஆப்ரேட்டராக இருந்துவருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக அங்கு இந்த பணி செய்துவருகிறார்.

இந்நிலையில், அம்மாபேட்டை திமுக செயலாளர் ரமேஷ் என்பவர் ஆறுமுகத்தை தொழில் செய்யவிடாமல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.அவரின் அலுவலகத்தில் இருந்த கேபிள் ஒளிபரப்பு பொருட்களையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது. இது பற்றி ஆறுமுகம் கேட்டதற்கு தான் ஆளுங்கட்சியில் இருப்பதாகவும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஆறுமுகம் காவல்நிலையங்களில் புகார் அளித்தும் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஒருபுறம் ஆளுங்கட்சியினரின் தொல்லை மறுபுறம் காவல்நிலையத்தின் அலட்சியம் இதனால் ஆறுமுகம் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆறுமுகம் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி சட்டபேரவை வளாகத்தில் தீக்குளிக்கமுயன்றுள்ளார். உடனே அங்கிருந்த காவல்துறையினர் ஆறுமுகத்தை மீட்டுள்ளனர். ஆளுங்கட்சியினரின் இத்தகைய செயல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவாதால் முதல்வர் இதற்கான தீர்வை காணவேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Thanthi TV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News