உலகிலேயே அதிக CCTV கேமரா கொண்ட நகரங்களில் சென்னைக்கும் இடம் !
உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக CCTV கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில், சென்னை மூன்றாம் இடத்தில் உள்ளது.
By : Bharathi Latha
இந்தியாவில் உள்ள குற்றங்களிலிருந்து மக்களைக் காப்பதற்காக அரசாங்கம் பல்வேறு இடங்களில் CCTV கேமராக்களை பொருத்தி உள்ளது. பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் CCTV கண்காணிப்பு கேமராக்களால் பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. அந்த வகையில், அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா என்று ஊடகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகப்பட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் மிகுந்த கண்காணிப்பு நகர பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக CCTV கேமராக்களை கொண்டுள்ளதாக டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவதாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளன. அந்த வகையில் 194 கேமராக்களுடன் நியூயார்க் 14வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திலும் உள்ளன. இந்தியா சதுர மைலுக்கு அதிக CCTV கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியதில் ஷாங்காய், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறது. மேலும், உலக அளவில் 3வது இடத்தை பிடித்து சென்னை சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
Image courtesy:livemint