அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ஐசிஎப்!
Breaking News.
By : Shiva
சென்னை ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மூன்று அடுக்குகள் கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 344 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு சென்னை ஐசிஎப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. குறிப்பாக ரயில்வே துறையில் இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகள் உற்றுநோக்கும் அளவிற்கு இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த வருடம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்போது சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இலங்கை, மலேசியா, வியட்நாம், அங்கோலா, தான்சானியா உள்ளிட்ட 17 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது சென்னை ஐசிஎபில் படுக்கை வசதிகளை அதிகரித்து புதிதாக ரயில் பெட்டி ஒன்றை தயார் செய்துள்ளது. இவற்றின் மீதூ அனைத்து விதமான சோதனைகளும் நிறைவு பெற்று விட்ட நிலையில் தற்போது மார்ச் மாதத்திற்குள் 344 ரயில் பெட்டிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. வழக்கமாக மூன்று அடுக்குகள் கொண்ட ஏசி பெட்டியில் 72 பயணிகள் பயணிக்க முடியும். தற்போது வடிவமைக்கப்படும் இந்த ரயில் பெட்டியில் 83 நபர்கள் வரை பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani