காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதல்: பின்னணி என்னவாக இருக்கும் ?
காபூல் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பின்னணி என்னவாக இருக்கும்- ஒரு பார்வை.
By : Bharathi Latha
தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கிருக்கும் மக்கள் தங்கள் தலிபான்கள் இடம் பாதுகாப்பாக இந்நாட்டில் வாழ முடியாத சூழ்நிலை காரணமாக அங்கே இருந்து வெளியேறி வருகிறார்கள். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலை மோதுகிறார்கள். குறிப்பாக தாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள். இது தலிபான்களுக்கு இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விமான நிலையத்தை விட்டு அமெரிக்க படை வெளியேற வேண்டும் தலிபான்கள் கூறியுள்ளார்கள்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான், காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் இங்கிருந்து வெளியேறி வருகின்றனர். தற்போது, காபூல் விமான நிலையம் மட்டுமே இருந்து வரும் நிலையில், அங்கு குண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தலிபான்களின் ஒரு எச்சரிக்கையாக இருக்குமோ? என்று உலக நாடுகள் தரப்பில் இருந்து பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், "காபூல் விமான நிலையம் அருகே வெடிகுண்டு வெடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது" என்றும் அவர் கூறினார். ஆக மொத்தத்தில் இது என்னவாக இருந்தாலும் அங்கு பாதிக்கப்படுவது மக்கள்தான்.
Input:https://www.cnn.com/2021/08/26/asia/afghanistan-kabul-airport-blast-intl/index.html
Image courtesy:CNN news