Kathir News
Begin typing your search above and press return to search.

"ஜெப யாத்திரையால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறைந்தது"- கிறிஸ்தவ கல்லூரி நோட்டீசால் பரபரப்பு !

Top Stories.

ஜெப யாத்திரையால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறைந்தது- கிறிஸ்தவ கல்லூரி நோட்டீசால் பரபரப்பு !
X

ShivaBy : Shiva

  |  31 Aug 2021 1:10 PM GMT

கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட ஜெப யாத்திரையின் விளைவால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கோவை செயின்ட் பால் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அடித்து அனைவருக்கும் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செயின்ட் பால் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த நோட்டீசில், "கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி அன்று கோவையில் சிறப்பு ஜெப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது விநாயகர் சதுர்த்தி நாளன்று அல்லது விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளோ அல்லது இரண்டு நாள் முன்னதாகவே கோவை மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளிலும் சபையாக குழுவாக அல்லது குடும்பமாக வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஜெப யாத்திரையில் ஈடுபட வேண்டும்" என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2017ஆம் ஆண்டு 200 வாகனங்களில் யாத்திரை சென்றதாகவும் 2018ஆம் ஆண்டு 1000 வாகனங்களில் யாத்திரை சென்று ஜெபித்ததாகவும் 2019ஆம் ஆண்டு இதே போல் யாத்திரை நடைபெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மூன்று ஆண்டுகள் ஜெப யாத்திரை நடத்தியதன் விளைவாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வெளியே கொண்டு வரக்கூடாது என்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலையை கரைத்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது தாங்கள் செய்த ஜெப யாத்திரையின் விளைவுதான் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடைகள் விதிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் கிறிஸ்தவர்களின் ஜெபக் கூட்டத்தினால் தான் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது கோவையில் இருக்கும் இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Source :

ஆ! https://t.co/rNFzc8fSlR

— கோ.செந்தில்குமார் (@oorkkaaran) August 31, 2021 " target="_blank">Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News