ஆப்கன்: பெண்களை வீட்டிற்குள்ளே அடைக்கிறதா? தலிபான்கள் சட்டம் !
பெண்கள் வீட்டிற்குள் இருந்து வேலை செய்யும் சட்டத்தை கொண்டு செயல்படுகிறதா? தலிபான்கள் உருவாக்கிய புதிய சட்டம்.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு இருக்கும் பெண்களுக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்காக வீட்டுக்கு வெளியே செல்லக் கூடாது என்றும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதே அவர்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். இது பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பின்பற்றப்பட வேண்டிய தற்காலிகக் கட்டுப்பாட்டு நடைமுறைதான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றி கூறுகையில், தாலிபான் பாதுகாப்புப் படையினர் பொது இடங்களில் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தாலிபான் செய்தித் தொடர்பாளரின் இது தற்காலிக ஏற்பாடு என்றும் அவர் கூறினாலும், எவ்வளவு காலம் தொடரும் என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை.
இந்தச் சூழலில் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஆப்கானில் பொதுமக்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறித்த நம்பத்தகுந்த அறிக்கைகள் கிடைத்திருப்பதாக ஐ.நா., கூறியுள்ளது. ஐ.நா., மனித உரிமைகள் தூதர் மிஷெல் பாச்லெட் "பெண்கள் உரிமைகளைப் பாதுகாப்பது அடிப்படையான கடமைகளில் ஒன்று" என்று கூறியுள்ளார். எனவே ஆப்கானிஸ்தான் பெண்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Input:https://www.nytimes.com/2021/08/25/world/asia/taliban-women-afghanistan.html
Image courtesy:wikipedia