ஆப்கன்: அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து நிலையில் தொடரும் குண்டு வெடிப்பு !
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
By : Bharathi Latha
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் கைப்பற்றி உள்ளார்கள் அங்கிருந்து தங்களுடைய நாட்டு மக்களை மீட்கும் பொருட்டு இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது ஒரு சூழ்நிலையில் அங்குள்ள ஆப்கன் மக்களும் தலிபான்கள் ஆட்சியின்கீழ் தாங்கள் வாழ விரும்பாத காரணத்தினால் தொடர்ச்சியான பாலம் வாழ விரும்பாத காரணத்தினால் தொடர்ச்சியான காபூல் விமான நிலையத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். ஆனால் தங்களுடைய நாட்டு மக்களை அகதிகளாக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது தலிபான்களுக்கு சற்றும் விருப்பமில்லை.
இதன் காரணமாக அவர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விமான நிலையத்தை அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டுக் விட்டுள்ளார்கள் அதன் பின்னர் அவருடைய முழு கட்டுப்பாட்டை தலிபான்கள் மேற்கொள்ளும் முடிவை எடுத்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி காபூல் விமான நிலைய வெளியே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காபூலில் மீண்டும் ISIS தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தியிருந்த நிலையில், தற்போது, மீண்டும் காபூல் விமான நிலையத்திற்கு அருகே குவாஜா புக்ரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ராக்கெட் செலுத்தி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இதுபோன்ற குண்டுவெடிப்பு தாக்குதல் மீண்டும் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Image courtesy:hindustantimes