அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை நிறுத்திய ஜப்பான்: காரணம் என்ன ?
அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசியை ஜப்பான் அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. தடுப்பூசி டோஸ்யில் இருந்த துகள்கள் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது.
By : Bharathi Latha
கொரோனா நான்காவது அலை தற்பொழுது ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அங்குள்ள மக்கள் இடம் நோய் தொற்று அதிகமாக பரவியதன் காரணமாக அங்கு தற்பொழுது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே அங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது தொற்றும் அபாயம் அதிகமாக பரவியிருந்தது. இதன் காரணமாக அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அங்கு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட மாடர்னா கொரோனா தடுப்பூசி பரவலாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது இந்நிலையில் அங்கு மாடர்னா தடுப்பூசி செலுத்தும் பணியின் போது, பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 10 லட்சம் தடுப்பூசி மருந்தை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்து உள்ளது. குறிப்பாக ஜப்பானில், அமெரிக்காவின் பைசர், மாடர்னா, இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனெகா ஆகிய மருந்துகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவைகள் பரவலாக மக்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் ஆகும்.
இந்தநிலையில் மாடர்னா கொரோனா தடுப்பூசி மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உலோகத்தின் துகள் போன்று உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 10 லட்சம் தடுப்பூசி மருந்தை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்து உள்ளது. மாடர்னா தடுப்பூசி போட்ட யாருக்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் இதுவரை ஏற்படவில்லை. இருந்தாலும் தற்போது விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் எங்கு தப்பு நடந்தது என்பது தெரியவரும்.
Input:https://www.bbc.com/news/world-asia-58405210
Image courtesy:BBC News