Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை கோவிலில் குண்டு‌ வைக்க முயன்ற தீவிரவாதி கைது!

ஜஹாங்கிரை சில காலமாக கண்காணித்து வந்த தேசிய புலனாய்வு முகமை மேலும் சிலருடன் சேர்ந்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு கோவிலில் குண்டு வைக்க ஜஹாங்கிர் திட்டமிட்டதை கண்டுபிடித்தது.

சென்னை கோவிலில் குண்டு‌ வைக்க முயன்ற தீவிரவாதி கைது!
X

ShivaBy : Shiva

  |  29 Aug 2021 1:55 PM GMT

சென்னையில் உள்ள ஒரு கோவிலில் குண்டு வைக்க திட்டமிட்ட வங்கதேச தீவிரவாதியை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் ஜஹாங்கிர் பிஸ்வாஸ் என்ற வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாதியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை அளித்த தகவல்களின் அடிப்படையில் மேற்கு வங்க மாநிலம் கோஜடங்கா பகுதியில் காவலில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் இந்த தீவிரவாதியை கைது செய்துள்ளனர். 8 வருடத்துக்கு முன்பே அவன் இந்தியா வந்ததாகவும் மீண்டும் வங்கதேசத்துக்கு திரும்ப திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

26 வயதான ஜஹாங்கிர் பிஸ்வாஸ் என்ற அந்த தீவிரவாதி வங்கதேசத்தின் சத்கிரா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றும் எட்டு வருடங்களுக்கு முன் அவன் இந்தியாவுக்குள் நுழைந்ததும் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் சென்னையில் தங்கி இருந்து பில்டிங் கான்ட்ராக்டராக வேலை‌ பார்த்ததும் தெரிய வந்துள்ளது.

ஜஹாங்கிரை சில காலமாக கண்காணித்து வந்த தேசிய புலனாய்வு முகமை மேலும் சிலருடன் சேர்ந்து கொண்டு சென்னையில் உள்ள ஒரு கோவிலில் குண்டு வைக்க ஜஹாங்கிர் திட்டமிட்டதை கண்டுபிடித்தது. சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் 2 வங்கதேசத்தவர்களை கைது செய்தனர்.

அவர்களை விசாரித்த போது கோவிலில் குண்டு வைக்க சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஹிஜ்ப்-உத்-தாஹிர் என்ற தீவிரவாத அமைப்பின் உதவியுடன் கோவிலில் குண்டு வைக்க திட்டமிட்டது‌ தெரிய வந்தது. அந்த இருவரும் ஜஹாங்கிர் பற்றி கூறியதால் காவல்துறையினர் அவனை தேடத் தொடங்கிய நிலையில் சென்னையில் இருந்து தப்பி வங்கதேசத்திற்கு செல்ல அவன் முயன்றுள்ளான்.

"அவன் வங்கதேசத்திற்கு சென்றுவிட்டு நிலைமை சீரான உடன் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். எல்லை பாதுகாப்பு படையினர் சரியான சமயத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பசிரத் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளனர்" என்று இதுபற்றி அறிந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஜஹாங்கிரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Source : Hindupost

Next Story
கதிர் தொகுப்பு
Trending News