மீண்டும் இந்து கடவுளை விமர்சித்து வீடியோ வெளியிடுவேன்-கருப்பர் கூட்டம் சுரேந்தர் மிரட்டல்!
கந்த சஷ்டி கவசத்தில் இருப்பதை மட்டுமே தான் கூறியதாகவும் தனது கைது விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
By : Shiva
இந்து மதத்தையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து அவமதித்து யூடியூப் வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டு கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்த சுரேந்தர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த சுரேந்தர் இனியும் தொடர்ந்து இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது இந்துக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்து கடவுள்களையும் இந்துக்களையும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டது. பின்னர் பாஜக மற்றும் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பால் வீடியோ வெளியிட்ட சுரேந்தர் மற்றும் கருப்பர் கூட்டம் இணையதளத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கருப்பர் கூட்டம் இணையதளத்தை நடத்தியவர்கள் அனைவரும் பெரியாரியவாதிகள், கம்யூனிசவாதிகள் மற்றும் திமுக அனுதாபிகளாகவே உள்ளனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சுரேந்தர் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்து கடவுள்களை பற்றியும் முருகனைப் பற்றியும் தான் தொடர்ந்து வீடியோ வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கந்த சஷ்டி கவசத்தில் இருப்பதை மட்டுமே தான் கூறியதாகவும் தனது கைது விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட சுரேந்தர் 8 மாத சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்து மீண்டும் ஹிந்துக் கடவுளை அவமதித்து வீடியோ வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதே கடவுளை இழிவு படுத்தி வீடியோ வெளியிட்ட இதுபோன்ற பெரியாரிஸ்டுகள் தற்போது திமுக ஆட்சியில் எப்படி எல்லாம் கடவுளை இழிவுபடுத்தப் போகிறார்களோ என்று அனைவர் மத்தியிலும் இது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Source : YouTube