தோரணமலையில் முருகன் சிலை உடைப்பு- தொடரும் சிலை உடைப்பால் பரபரப்பு !
ஏற்கனவே தோரணமலை அருகே நான்கு மாவடி என்னுமிடத்தில் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸின் 'இயேசு விடுவிக்கிறார்' சர்ச் இருப்பதால் தோரணமலை என்னும் பெயர் பலகையில் மாதாபுரம் என்று குறிப்பிட்டு அந்த ஊரையே மாதாபுரம் என்று மாற்றிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
By : Shiva
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவிலின் நுழைவாயிலில் உள்ள முருகன் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான நுழைவு வாயில் மாதாபுரம் என்னும் இடத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயில் பகுதியில் கோவில் உண்டியல் உள்ளது. அதன் அருகே முருகன் சிலை ஒன்றும் இருந்தது. ஏற்கனவே தோரணமலை அருகே நான்கு மாவடி என்னுமிடத்தில் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸின் 'இயேசு விடுவிக்கிறார்' சர்ச் இருப்பதால் தோரணமலை என்னும் பெயர் பலகையில் மாதாபுரம் என்று குறிப்பிட்டு அந்த ஊரையே மாதாபுரம் என்று மாற்றிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இங்கு தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு செல்வதற்கான நுழைவு வாயிலில் இருந்த இந்த முருகன் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சிவக்குமார் என்பவர் நேற்றிரவு மதுபோதையில் முருகன் சிலையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மது போதையில் தான் சிலையை உடைத்தாரா அல்லது கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் சிக்கிக் கொண்டு கோவில் சிலையை இடித்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : MAALAIMALAR