Kathir News
Begin typing your search above and press return to search.

வராகி அம்மனுக்கு கோவில் கட்டிய பிரபல நடிகர்! - கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!

Cinema News.

வராகி அம்மனுக்கு கோவில் கட்டிய பிரபல நடிகர்! - கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!
X

ShivaBy : Shiva

  |  27 Aug 2021 1:33 AM GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கட்டிய வராகி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்நாகரம்பேடு கிராமத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு வராகி அம்மனுக்கு கோவில் கட்டி வந்தார். கட்டுமானம் முடிந்து கோவிலில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். முன்னதாக கோவிலில் யாக பூஜைகள் நடைபெற்று புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் யோகிபாபு புனித நீரை வராகி அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தார். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்றுச் சென்றனர். நகைச்சுவை நடிகர் யோகிபாபு வராகி அம்மனுக்கு கோவில் கட்டி அதற்கு விமரிசையாக கும்பாபிஷேகம் செய்த நிகழ்ச்சி அந்த கிராமத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக நடிகர் அர்ஜுன் போரூர் கெருகம்பாக்கத்தில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டியது குறிப்பிடத்தக்கது. 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலை கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுனால் கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகமும் சமீபத்தில் விமரிசையாக நடந்தது குறிப்பிடத்தக்கது.


Source : Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News