Kathir News
Begin typing your search above and press return to search.

கிருஷ்ண ஜெயந்தி : தலைவர்கள் வாழ்த்து!

Breaking News.

கிருஷ்ண ஜெயந்தி : தலைவர்கள் வாழ்த்து!

ShivaBy : Shiva

  |  30 Aug 2021 6:18 AM GMT

கிருஷ்ண ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போன்ற வேடம் அணிந்து பூஜை செய்து கிருஷ்ணரை வீட்டுக்கு அழைப்பது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள தனது வாழ்த்து பதிவில் "உங்கள் அனைவருக்கும் இனிய ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் தங்களது வாழ்த்து செய்தியை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்று திரும்பத் திரும்ப கூறும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் இன்னும் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News