Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் சுவற்றில் விளம்பரம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகள்-இந்து முன்னணி எடுத்த நடவடிக்கை ?

Breaking News.

கோவில் சுவற்றில் விளம்பரம் செய்த கிறிஸ்தவ மிஷனரிகள்-இந்து முன்னணி எடுத்த நடவடிக்கை ?

ShivaBy : Shiva

  |  1 Sep 2021 1:28 AM GMT

மதுரையில் கோவில் சுவற்றில் கிறிஸ்தவ சபையின் விளம்பரம் வரையப்பட்டதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே முனியசாமி கோவில் சுற்றுச் சுவற்றில் கலங்கரை விளக்கு AG கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் வரைந்து இருந்தனர். இந்த திருச்சபையின் 30வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி வரையப்பட்ட இந்த விளம்பரத்தில் பைபிள் வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.

கோவில் சுவற்றில் பிற மத போதனைகளும் விளம்பரமும் இடம் பெற்றிருந்ததால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்பகுதி இந்துக்களும் இந்து முன்னணியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்து முன்னணியினரின் புகாரை அடுத்து கிறிஸ்தவ திருச்சபை விளம்பரம் அழிக்கப்பட்டது.

கிறிஸ்தவ மதபோதகர்கள் பலர் இந்து மதத்தின் மீதும் இந்துக்கள் மீதும் வெறுப்பைத் தூண்டும் வண்ணம் பேசி வரும் நிலையில், கோவில் சுவற்றில் மத விளம்பரம் செய்யும் அளவுக்கு அவர்களுடைய செல்வாக்கு கூடிவிட்டதா என்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது தொடர்வது தமிழகத்தின் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் பங்கம் விளைவிக்கும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Source : HinduMunnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News