சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த, இயற்கையாகவே கிடைக்கும் காய்கறி !
சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவ பாகற்காய் மிகவும் பயன்படுகிறது.
By : Bharathi Latha
சந்தைகளில் விற்கப்படும் தோட்ட பாகற்காய் கசக்கும் என்பதால், அதை நிறைய பேர் விரும்புவதில்லை. ஆனால் உண்மையிலேயே இவற்றில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற சுவாசப் பிரச்சினைகளைக் குணப்படுத்த பாகற்காய் மிகவும் உதவியாக இருக்கும். அடுத்து கல்லீரல் பிரச்சனைகளை குணப்படுத்த இதுவும் ஒரு மருந்து என்று சொல்லலாம். தினமும் ஒரு கிளாஸ் கசப்பான பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் கல்லீரல் பிரச்சினையில் இருந்து விடுபடும் மாற்றத்தை நீங்களே உணர முடியும்.
இந்த கசப்பான பாகற்காய் உட்கொள்வது உங்களுக்கு ஆரோக்கிய நலன்களைத் தருவது மட்டுமல்லாமல் முகப்பரு, அழுக்குகள் மற்றும் ஆழமான தோல் நோய்களிலிருந்து விடுபட உங்களுக்கு உதவியாக இருக்கும். சிரங்கு, அரிப்பு, சொரியாசிஸ், படர்தாமரை மற்றும் பிற பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும் ஒரு மாமருந்து. பாகற்காயின் முக்கியமான குணநலன் என்றால் இது நீரிழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாக்க மிகவும் உதவியாக இருக்கும். டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்த இந்த பாகற்காய் மிகவும் உதவியாக இருக்கும். இது நீண்ட காலமாக இந்தியாவின் பண்டைய கால மருத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
அது மட்டுமில்லாமல் இந்த பாகற்காயை நம் வழக்கமான உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டால், உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்கு இயற்கையாக ஆற்றல் கொடுக்கவும், இரத்த சுத்திகரிப்புக்கும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும், வயதாகும் விளைவை தாமாதப்படுத்தவும், காயங்களை குணப்படுத்தவும் உதவியாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சினையைப் போக்க உதவும் பாகற்காய். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், கசப்பான செரிமானத்திற்கு உதவுகிறது. பாகற்காயை உணவுபட்டியலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உணவு செரிமானம் செய்யப்பட்டு, கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். இது அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
Image courtesy: indian express