Kathir News
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த அண்ணன் - தங்கை

வேதாரண்யத்தில் ஏழ்மையான சூழ்நிலையில் பெற்றோரின் மருத்துவ கனவை அண்ணன் தங்க இருவரும் நினைவாக்கினார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இருவருக்கும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பிடித்த அண்ணன் - தங்கை

KarthigaBy : Karthiga

  |  31 Oct 2022 7:30 AM GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவுக்கு உட்பட்ட நெய் விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி இவருடைய மனைவி ராணி இவர்களுடைய மகன் ஸ்ரீபரன் மகள் சுபஸ்ரீ பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாயக் கூலி வேலை பார்த்து வந்தார். இவர் சுமை தூக்கும் போது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன் பிறகு தையல் வேலை செய்தும் ஆடுகள் வளர்த்தும் ராணி குடும்பத்தை நடத்தி வருகிறார். எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும் மகன் மகளை மருத்துவம் படிக்க வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக இரவு பகல் பாராமல் தையல் தொழில் செய்தும் ஆடுகள் வளர்த்தும் தங்களது பிள்ளைகளை ராணி படிக்க வைத்தார். மனைவிக்கு தேவையான உதவிகளை வீராசாமியும் செய்து கொடுத்தார்.


பெற்றோரின் கனவை நினைவாக்கம் வகையில் ஏழ்மையான சூழ்நிலையிலும் ஸ்ரீபரணும் அவருடைய தங்கை சுபஸ்ரீடியும் நன்றாக படித்தனர். அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும், பின்பு தேத்தாகுடி தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்தனர். தொடர்ந்து ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுபஸ்ரீயும் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஸ்ரீபரணும் பிளஸ் டூ படித்து முடித்தனர். பின்னர் இருவரும் தஞ்சாவூரில் உள்ள ஒரு மையத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றனர். அதனைத் தொடர்ந்து நடந்த நீட் தேர்வில் ஸ்ரீபரண் 438 மதிப்பெண்ணும் சுபஸ்ரீ 319 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். மருத்துவ கலந்தாய்வில் சுபஸ்ரீக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரனுக்கு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது .அவர்களையும் அவர்களை நன்றாக படிக்க வைத்த பெற்றோரையும் அப்பகுதி மக்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.இது குறித்து வீராசாமி கூறியதாவது:-


எங்களது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்தோம். சுமை ஒன்றை தூக்கும்போது எனக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியதோடு எனது மனைவி மன உறுதியோடு இரவு பகலாக தையல் தொழில் செய்தும் ஆடு வளர்த்தும் பிள்ளைகளை படிக்க வைத்தார். அவருக்கு உறுதுணையாக நான் இருந்தேன். பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும் எங்களை உற்சாகப்படுத்தியது. ஏழ்மையான சூழ்நிலையிலும் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தோம். அவர்களும் நன்றாக படித்து மருத்துவ கல்விக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றனர் தற்போது இருவருக்குமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது நாங்கள் கண்ட கனவு நினைவாக போகிறது அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீட்டில் தற்போது வசித்து வருகிறோம்.


எங்களுக்கான சிறிய வீட்டில் கூட போட முடியாமல் பிளாஸ்டிக் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளோம். மழை பெய்யும் போது மிகவும் சிரமமாக உள்ளது மருத்துவக் கல்லூரியில் இருவருக்கும் இடம் கிடைத்தாலும் அதற்கான கல்லூரி கட்டணத்தை எப்படி செலுத்த போகிறோம் என்று தெரியவில்லை எங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரி கட்டணத்தை அரசோ அல்லது கல்வி ஆர்வலர்கள் ஏற்றால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News