BSF வரலாற்றில் அனைவரையும் அசர வைக்கும் அளவில் சாதனை படைத்த பெண்!! ஐந்தே மாதத்தில் ப்ரமோஷன்!

By : G Pradeep
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக எல்லை பாதுகாப்பு பணியில் உத்திரபிரதேசத்தின் நொய்டா நகரைச் சேர்ந்த சிவானி என்ற பெண் கான்ஸ்டபிளாக சேர்ந்து பணியாற்றி 5 மாதங்கள் ஆன நிலையில் தற்பொழுது தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்தப் பெண் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி பணியில் சேர்ந்ததாகவும், பிரேசில் நாட்டில் கடந்த ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்ற 17-வது உலக வுசு சாம்பியன்ஷிப் போட்டியில் ஷிவானி இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றதாகவும், அதை ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்து 5 மாதங்களே ஆன நிலையில் பதவி உயர்வு பெற்றிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் பி.எஸ்.எஃப் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத சாதனையை இந்தப் பெண் செய்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பி.எஸ்.எஃப். இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி தலைமை கான்ஸ்டபிள் பதவி உயர்வுக்கான ஆவணங்களை ஷிவானிக்கு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
