Kathir News
Begin typing your search above and press return to search.

2023 - 24 ஆம் நிதிகாண்டில் நேரடி வருவாய் 10.5% அதிகரிக்கும் பட்ஜெட்டில் கணிப்பு

2023 - 24 ஆம் நிதியாண்டில் நேரடி வருவாய் 10.5% அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

2023 - 24  ஆம் நிதிகாண்டில் நேரடி வருவாய் 10.5% அதிகரிக்கும் பட்ஜெட்டில் கணிப்பு

KarthigaBy : Karthiga

  |  2 Feb 2023 4:15 AM GMT

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2023 - 24 ஆம் நிதி ஆண்டுக்கான நேரடி வரி வருவாய் தணிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி தனிநபர் வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி அடங்கிய நேரடி வரி வருவாய் 10.5% அதிகரித்து ₹ 18.23 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.



நடப்பு நிதியாண்டின் வரி வருவாய் 14.20 இலட்சம் கோடியாக இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது மாற்றம் அமைக்கப்பட்ட மதிப்பீட்டில் ரூபாய் 16.5 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.


இதுவும் முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல 2023 - 24 ஆம் ஆண்டுக்கான சுங்கவரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூபாய் 2.3 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் பட்ஜெட்டில் கணிக்கப்பட்டு இருக்கிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News