Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவது உறுதி: யாருடைய குடியுரிமையும் பறிபோகாது- அமித்ஷா!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிஏஏ திட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவது உறுதி: யாருடைய குடியுரிமையும் பறிபோகாது- அமித்ஷா!

KarthigaBy : Karthiga

  |  12 Feb 2024 3:31 AM GMT

மக்களவை தேர்தலுக்கு முன்பாக சிஏ எனும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். இது யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக கொண்டுவரப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஈடி தவ் சேனலில் உலகளாவிய பொருளாதார மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது :-


1947 இல் நாடு பிரிவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்பதால் இந்திய ஒற்றுமை நடை பயணம் நடத்த நேரு காந்தி வாரிசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை .2014ல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. எல்லாத் துறையிலும் மோசடிகள் இருந்தன .வெளிநாட்டு முதலீடு வரவில்லை .இப்போது 10 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளது. அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. ஊழல் எதுவும் இல்லை . எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம் .


அயோத்தயில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் காத்திருந்தனர். ஆனால் சமாதான அரசியலாலும் சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டியும் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முஸ்லிம் சகோதரர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள். தூண்டப்படுகிறார்கள். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே சிஐஏ உள்ளது. இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல.


சிஏஏ சட்டம் கொண்டுவர நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியிலேயே கையெழுத்திடப்பட்டது. ஆனால் சமாதான அரசியல் காரணமாக காங்கிரஸ் அதை புறக்கணித்தது .2019ல் ஏற்றப்பட்ட இந்த சட்டம் தொடர்பான விதிகள் வெளியிடப்பட்ட பிறகு வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக சட்டம் அமலுக்கு கொண்டுவரப்படுவது நிச்சயம் .உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட அமலாக்கம் சிறந்த சமூக மாற்றம். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் குறியீடுகள் இருக்க முடியாது .இவ்வாறு அமித்ஷா கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News