Kathir News
Begin typing your search above and press return to search.

வீரர்களுக்கு காயம் ஏற்படுவதால் குத்து சண்டைக்குத் தடை விதிக்கலாமா? பீட்டாவிற்கு சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி

வீரர்களுக்கு காயம் ஏற்படுவதால் குத்துச்சண்டைக்கு தடை விதிக்கலாமா என்று ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்

வீரர்களுக்கு காயம்  ஏற்படுவதால் குத்து சண்டைக்குத் தடை விதிக்கலாமா? பீட்டாவிற்கு சுப்ரீம் கோர்ட் சுளீர் கேள்வி

KarthigaBy : Karthiga

  |  30 Nov 2022 11:15 AM GMT

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று நடந்த விசாரணையின் போது கூபா உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா வாதாடினார். அப்போது அவர் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் விலங்குவதை தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இயற்கைக்கு மாறாக பயிற்றுவிக்கப்படுகின்றன என்றார்.


அப்போது நீதிபதிகள் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தும் தமிழகம், கர்நாடகா, மராட்டிய மாநில அரசுகளின் சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?விலங்கு வதையை தடுக்க உரிய விதிகள் ஏற்படுத்தி உள்ளதா ?என கேட்டனர். அப்போது மூத்த வக்கீல் சித்தார்த் 3 மாநிலங்களும் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளன.ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கலாச்சார உரிமை எனக் கூறுவதை நிரூபிக்க வேண்டும். வெறும் விளையாட்டு செயல்பாடு அடிப்படை உரிமையாக கொள்ள முடியாது. குறிப்பிட்டு பகுதியினர் ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என்பது ஏற்க முடியாது.


ஒரு காலத்தில் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், வரதட்சனை போன்றவை கூட கலாச்சாரத்தின் பகுதியாக இருந்தன என குறிப்பிட்டார். அப்போது நீதிபதிகள் இவற்றை தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டி உள்ளார். மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா தொடர்ந்து வாதிடுகையில் ஜல்லிக்கட்டு போன்றவை கலாச்சாரத்தின் நடவடிக்கையாக இருந்திருக்க வேண்டும். வெறும் உரிமையை நிலைநாட்ட முயற்சி செய்வதை ஏற்க முடியாது .அடிப்படை உரிமையை கொண்டாட எவ்வித அடிப்படையும் இல்லை என்றார். இதைத் தொடர்ந்து பீட்டா அமைப்பு சார்பில் ஆஜராக மூத்த வக்கீல் ஷியாம் திவான் கூறுகையில் 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் மனிதர்கள் இறப்பதால், காயம் ஏற்படுவதால் உயிருக்கும் உடல் சார் உரிமைக்குமான பாதுகாப்பு மீறப்படுகிறது' என்று தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் ஜல்லிக்கட்டில் காளைகள் இறப்பது குறித்து இங்கு கேள்வி எழும்பவில்லை. என குறிப்பிட்டபோது வக்கீல் ஷியாம் திவான், 'ஜல்லிக்கட்டில் காளைகளும் வதை செய்யப்படுகின்றன.


மனிதர்களுக்கும் காயம் ஏற்படுவதால் உயிருக்கும் உடல் சார் உரிமைக்குமான பாதுகாப்பு வந்துவிடுகிறது' என்றார். அப்போது நீதிபதிகள் 'குத்துச்சண்டையில் வீரர்கள் காயமடைவதால் அதற்கு தடை விதிக்கலாமா? என கேட்டபோது ஷியாம் திவான் 'பீட்டாவின் மனதை தள்ளுபடி செய்தாலும் செய்யுங்கள் குத்துச்சண்டைக்கு தடை விதித்து விடாதீர்கள்' என குறிப்பிட்டு வாதத்தை தொடர்ந்தனர். அனைத்து தரப்பினரின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணை இன்றும் தொடரும் என தெரிவித்தனர்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News