கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!
கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதனால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 4,972 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 27,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
இந்த தருணத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவி சோபி கிரேகோயருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
அண்மையில் பிரிட்டன் சென்று வந்த சோபி, உடல்நிலை சரில்லாததால் அவரை தன்னை தனிமை படுத்தியுள்ளார். அவரின் ரத்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை பற்றி பிரதமர் அலுவலகம் கூறுகையில் , சோபியின் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனையை பின்பற்றி, தற்போது தனிமையில் இருப்பார். அவர் நன்றாக தான் இருக்கிறார். அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு லேசாக தான் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.