Kathir News
Begin typing your search above and press return to search.

தாலிபான்கள் பயங்கரவாதிகள்.. ஒருபோதும் அரசாக அங்கீகரிக்க முடியாது.. கனடா பிரதமர் அதிரடி!

தாலிபான் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசாக ஒருபோதும் அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் மோடி ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

தாலிபான்கள் பயங்கரவாதிகள்.. ஒருபோதும் அரசாக அங்கீகரிக்க முடியாது.. கனடா பிரதமர் அதிரடி!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Aug 2021 8:45 AM GMT

தாலிபான் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தான் அரசாக ஒருபோதும் அங்கீகரிக்கும் திட்டமில்லை என்று கனடா பிரதமர் மோடி ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றிய சம்பவம் அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல நாடுகளில் தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது. தாலிபான்கள் அமைக்கவிருக்கும் அரசை ஏற்றுக்கொள்வதில் பல்வேறு நாடுகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நாங்கள் எவ்வித எதிரிகளையும் சம்பாதிக்க விரும்பவில்லை. சர்வதேச நாடுகள் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என தாலிபான்கள் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் பற்றிய கேள்விக்கு தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் கனடாவுக்கு இல்லை. அவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பலவந்தமாக தூக்கிவீசிவிட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். கனடாவை பொறுத்தவரையில் தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: My Net

https://www.puthiyathalaimurai.com/newsview/113225/Canada-will-not-recognise-Taliban-as-Afghan-govt-says-PM-Justin-Trudeau

Next Story
கதிர் தொகுப்பு
Trending News